காமிரா கண்கள்
பாலசுப்ரமணியம் வேலு பொதுத்துறை வங்கி ஒன்றில் பொதுமேலாளராகப் பணிபுரிந்தவர். இப்போது தன் கல்லூரி காலக் கனவான புகைப்படக் கலையைக் கையிலெடுத்துள்ளார். சென்னை புகைப்படசங்கத்தின் செயலாளராக இருக்கும் பாலசுப்ரமணியம் இயற்கையைத் தன் காமிரா கண்களின் வழியே பதிவு செய்பவர். ‘எப்போதும் மகிழ்வான தருணங்களையே பதிவு செய்ய விரும்புகிறேன்!‘ என்கிற இவருக்கு பறவைகள், விழாக்கள், பயணங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வது விருப்பமானது.